எதிர்கால சந்ததியினரை ஒழுக்கமுள்ள சிறந்த தலைவர்களாக உருவாக்கும் நோக்கில் பொலிஸ் திணைக்களம் நாடெங்குமுள்ள பாடசாலைகளில் பொலிஸ் மாணவர் சிப்பாய் படை அணிகளை உருவாக்கும் விசேட திட்டத்தை தற்போது திருப்திகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதலில் மாவட்டங்கள் தோறும் மேற்பார்வை பொலிஸ் உத்தியோகஸ்தரின் ஏற்பாட்டில் இந்த பொலிஸ் மாணவர் சிப்பாய் படையணிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஏற்பாட்டுக்கமைய கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் இந்த மாணவர் சிப்பாய் படையணியினரை அமைக்கும் திட்டம் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக இந்த படையணியின் பிரதிப் பணிபாளரும் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரி பிரதிப் பணிப்பாளருமான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிந்தக குணவர்த்தன தெரிவித்தார்.
இந்த விசேட திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுபது பாடசாலைகளில் நிறுவப்பட்டுள்ள படையணியில் இணைந்து கொண்ட மாணவர்களையும், பெற்றோர்களையும், பொறுப்பாசிரியர்களையும் சந்திக்கும் விசேட நிகழ்வு மெதடிஸ்த மத்திய கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று (12) நடைபெற்றது.
இந்த படையணியின் மட்டக்களப்பு மாவட்டமேற்பார்வை பொலிஸ் அதிகாரி வை. கிளஸ்டன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பொலிஸ் மாணவர் சிப்பாய் படையணியின் பிரதிபணிப்பாளர் சிந்தக குணரத்ன சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண மேற்பார்வை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் எல்.பி.அஜித் பிரசன்ன, மட்டக்களப்பு தலைமை நிலைய பொறுப்பதிகாரி ஏ.எஸ்.ஆர். ஹெற்றி ஆராய்ச்சி, படையணி பயிற்சி உத்தியோகஸ்த்தர் விஜிதா உட்பட பல பொலிஸ் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், பொறுப்பாசிரியர்கள், இணைக்கப்பட்ட பல்வேறு பாடசாலைகளின் மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் படையணி செயற்பாடுகளில் திறமைகாட்டிய பொலிஸ் மாணவர் சிப்பாய் படையணியின் மாணவர்களுக்கு சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் ஆசிரியர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
2/13/2020 08:50:00 AM
Home
/
உள்ளூர்
/
மட்டக்களப்பு
/
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் இடம்பெற்ற மாணவர் சிப்பாய் படையணிகளின் சந்திப்பு நிகழ்வு!
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் இடம்பெற்ற மாணவர் சிப்பாய் படையணிகளின் சந்திப்பு நிகழ்வு!
Subscribe to:
Post Comments (Atom)










No comments: