குறித்த வழக்கானது ஆரம்பிக்கப்பட்டு முடிவுறும் வரையில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வந்த ஆயுர்வேத வைத்தியர் வழக்கு தொடர்பான தீர்ப்பு 05.02.2020 அன்று வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் குறித்த தினத்தில் அவர் முன்னிலையாகாது தலைமறைவாகினார்.
இதனைத் தொடர்ந்து நேற்று (12 ) வைத்தியரை குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி இளஞ்செழியன் 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட பெண்னிற்கு 10 இலட்சம் நஷ்ட ஈடு செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.வைத்தியரின் பெண் உதவியாளருக்கு 5 ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
தற்போது குறித்த வைத்தியரை கைது செய்ய அவரது சொந்த ஊரான குருநாகல் பிரதேசத்திற்கு பொலிசார் சென்ற போது அவர் வீட்டில் இருந்து தலைமறைவாகியுள்ளார். தலைமறைவாகியுள்ள வைத்தியரை கைது செய்ய விசேட பொலிஸ் குழு அமைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கொழும்பு பொலிஸ்மா அதிபர் திருகோணமலை பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் கைது செய்யும் பிடியாணை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வைத்தியர் நாட்டை விட்டு வெளியேறாத வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments: