மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பாடசாலைகளில் கல்வி கற்று தரம் 5புலமை பரிசில் பரீட்சையில் கடந்த வருடம் தோற்றி மாவட்ட வெட்டு புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (27) வியாழக்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
அறிவாலயம் அறக்கட்டளை நம்பிக்கை நிதியம்
அமரர்.அலையப்போடி ஞாபகார்த்தமாக இந் நிகழ்வை ஒழுங்கு செய்து நடாத்தினர்.
வருடா வருடம் அறிவாலயம் அறக்கட்டளை நிதியம், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்பெற்ற மாணவர்களை பாராட்டி, கௌரவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது, மாணவர்களுக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டதுடன், நினைவுச்சின்னம்இ பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. மேலும், மாணவர்களுக்கு அறிவாலயத்தினால் 5000ரூபாவும், DFCC வங்கியினால் 5000ரூபாவும் என மொத்தம் 10 ஆயிரம் வைப்பிலிடப்பட்டு சேமிப்பு வங்கிக்கணக்குப்புத்தகமும் வழங்கப்பட்டன.
சக்தி மகளிர் மாணவர்களுக்கு பரிசில்களும், இல்லத்திற்கு கணணியும் வழங்கி வைக்கப்பட்டது.
அறிவாலய அறக்கட்டளை நம்பிக்கை நிதியத்தின் ஆலோசகர் சி.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆன்மீக அதிதியாக சிவஸ்ரீ.மு.கு.சச்சிதானந்தக்குருக்கள், ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தா ஜீ மகராஜ், பிரதம அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மற்றும் கௌரவ, விசேட அதிதிகளாகவும் பலர் கலந்து கொண்டனர்.











No comments: