News Just In

2/03/2020 11:30:00 AM

வவுணதீவு பிரதேச செயலக பிரிவில் வாழ்வாதார வேலைத்திட்டத்தின் ஆரம்பகட்ட உதவி வழங்கும் நிகழ்வு

-லியோன்-
வாழ்வாதார உதவி திட்டத்தின் பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சிகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு ஆயித்தியமலை வடக்கு , கற்பனைக்குளத்தில் நடைபெற்றது

மட்டக்களப்பு எக்சன் யுனிட்டி லங்கா நிறுவனத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை நிலையில் வாழ்கின்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பிரதேச செயலக மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .

மட்டக்களப்பு எக்சன் யுனிட்டி லங்கா நிறுவனம் முன்னெடுக்கும் வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் கோழி வளர்ப்பு திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது

இதற்கு அமைய மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவின் ஆயித்தியமலை வடக்கு கிராம சேவை பிரிவில் கற்பனைக்குளம் கிராமத்தில் கோழி வளர்ப்புக்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

மட்டக்களப்பு எக்சன் யுனிட்டி லங்கா நிறுவனம் சிறுவர் விசேட அனுசரணையுடன் நியூசிலாந்து ஜயில் பவுண்ட் கோலா நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்களுக்கான ஆரம்பகட்ட உதவி வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு ஆயித்தியமலை வடக்கு , கற்பனைக்குளத்தில் நடைபெற்றது .

ஆரம்பகட்ட கோழிக்குஞ்சிகள் வழங்கும் நிகழ்வில் ஆயித்தியமலை வடக்கு , கற்பனைக்குளம் கிராம அபிவிருத்தி குழு தலைவர் கதிர்காமம் காந்தி, மட்டக்களப்பு எக்சன் யுனிட்டி லங்கா நிறுவன உத்தியோகத்தர்கள், கற்பனைக்குளம் கிராம பயணிகள் கலந்துகொண்டனர்.

No comments: