
மட்டக்களப்பு இந்துக் கல்லூரி 74 ஆவது ஆண்டு தின நிகழ்வுகள் இன்று(03) பாடசாலை அதிபர் இரா.சண்டேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
கௌரவ விருந்தினர்களாக கல்லூரியின் பழைய மாணவர்களான மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்க ஸ்தாபகர் சி.தேவசிங்கன், ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெட்ணம், பட்டிருப்பு கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் செ.மகேந்திரகுமார், நேத்திரா அலைவரிசை உதவிப் பணிப்பாளர் கலாநிதி ஸ்ரனிஸ்லாஸ் மோசேஸ், மண்முனை வடக்கு கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் செ.தில்லைநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தத்துடன்.
கல்வி நிருவாக உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
அதிதிகள் வரவேற்பு, கொடியேற்றுதல், பாடசாலையின் ஸ்தாபகர் நல்லையா அவர்களின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தல், மங்கல விளக்கேற்றல், அதிதிகள் உரை, கலை நிகழ்வுகள் போன்றன இடம்பெற்றன.
இதன்போது தமது வாழ்நாளில் சாதனை படைத்து கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்ட பழைய மாணவர்கள் ஐவருக்கும் பாடசாலை நிருவாக்கத்தினரால் கௌரவம் வழங்கப்பட்டது.
அத்துடன் கல்லூரி தினமான நேற்று 02.02.2020 நடாத்தப்பட்ட கரப்பந்து மற்றும் மென்பந்து சுற்றுப்போட்டிகளில் வெற்றியீட்டிய அணிகளுக்கு வெற்றிக்கோப்பைகளும் வழங்கப்பட்டன.



































No comments: