News Just In

2/03/2020 11:11:00 AM

வாழைச்சேனையில் இளம்பெண்ணின் சடலம் மீட்பு!

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவு மாஞ்சோலைக் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து இளம் பெண்ணொருவரின் சடலம் சனிக்கிழமை 01.02.2020 இரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

19 வயதான அந்த இளம் பெண் இரண்டு குழந்தைகளுக்குத் தாயெனவும் மீட்கப்பட்ட சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூறாய்வுப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

No comments: