தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மாத்தறை - கொடகம முதல் ஹம்பாந்தோட்டை வரையான பகுதியை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மாத்தறை - கொடகம முதல் ஹம்பாந்தோட்டை வரையான பகுதியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் இடம்பெற்றிருந்தது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதேவேளை மக்களின் பாவனைக்காக நேற்றைய தினம் திறக்கப்பட்ட மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான நெடுஞ்சாலையின் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது.
இதற்கமைய ஹம்பாந்தோட்டை முதல் கொழும்பு கோட்டை வரையிலான பேருந்து போக்குவரத்து கட்டணமாக பயணிகளிடம் இருந்து 880 ரூபா அறவிடப்படவுள்ளது.
அதேவேளை தங்காலை முதல் கோட்டை வரையில் பயணிக்கும் பயணிகளிடம் 680 ரூபா அறிவிடப்படவுள்ளது.
அத்துடன் ஹம்பாந்தோட்டை முதல் மாக்கும்புர வரையில் 810 ரூபாவும் தங்காலை முதல் மாக்கும்புர வரையில் 610 ரூபாவும் பேருந்து போக்குவரத்து கட்டணமாக அறவிடப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
No comments: