இன்று (17) நண்பகல் புத்தளம் எச்.என்.பி. வங்கிக்கு முன்பாக யாழ்பாணத்திலிருந்து நுரைச்சோலை நோக்கிச் சென்ற லொறி ஒன்று வீதியைவிட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சாரதி உயிர்தப்பியதோடு காயங்கள் எதுவும் ஏற்படவில்லையென பொலிசார் தெரிவித்தனர்.
இதையடுத்து குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
2/17/2020 03:28:00 PM
சாரதி தூங்கியதால் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான லொறி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: