-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 24ஆம் திகதி பதவி உயர்வு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிகழ்வு முற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் திணைக்களத்தினால் கண்காணிப்பு முகாமைத்துவ உதவியாளர் முதலாந்தரத்துக்கு பதவி உயர்த்துதல் நிகழ்வு எதிர்வரும் 24 ஆம் திகதி (24.02.2020)) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெறும் என அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்னவினால் பதவி உயர்வு பெறுவோருக்கு முன்னதாக கடிதங்களும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் அந்நிகழ்வு எதிர்வரும் 19ஆம் திகதி புதன்கிழமை (19.02.2020) அலரி மாளிகையின் கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வுக்கான கடிதம் கிடைக்கப்பெற்றவர்கள் அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு தங்களது ஆசனத்தில் அமர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
அத்துடன் பதவி உயர்வு பெற வரும் பெண்கள் இள நிறத்தில் சேலை (light colours) அல்லது கண்டியன் சேலை அணிவதோடு ஆண்கள் நீளக் காற்சட்டையும், இள நிறமான சேர்ட்டும் அணிந்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பல வருடங்களுக்குப் பின்னர் நாடளாவிய ரீதியில் பணியாற்றும் அஞ்சல் திணைக்கள அதிகாரிகளுக்கு இந்த பதவி உயர்வுகள் பிரதமரினால் வழங்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: