-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்து வருகின்ற பார்வையற்றவர்கள் மற்றும் பார்வை குறைபாடுடையவர்களின் நலன் கருதி செயற்படும் மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு நிதிசேர்க்கும் முகமாக கொடிவாரம் இன்று திங்கட்கிழமை (17) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இக் கொடிவாரம் எதிர்வரும் 28ம் திகதி வரை அமுல்படுத்தப்படவிருக்கின்றது. இதனை முன்னிட்டு முதலாவது கொடியினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவுக்கு அணிவித்து கொடி விற்பனை ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி மாவட்ட உதவிச் செயலாளர் ஏ. நவேஸ்வரன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் சந்திரகலா குகனேஸ்வரன், உதவி மாவட்ட உதவிச் செயலாளர் பணிமனை சிரேஷ்ட முகாமைத்துவ அலுவலர் ஏ.முஹம்மத் றிழா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
2/17/2020 02:15:00 PM
மட்டக்களப்பில் விழிப்புலனற்றோர் கொடிவாரம் ஆரம்பித்து வைப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments: