News Just In

2/17/2020 04:35:00 PM

பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் புதிய கூட்டணி! தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்ய விண்ணப்பம்!!

ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர சமர்ப்பித்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் உருவாகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியானது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளதுடன் புதிய கூட்டணியின் சின்னமாக மொட்டு சின்னம் அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணியின் முழு விபரம்...
தலைவர்-மகிந்த ராஜபக்ஸ
தவிசாளர்- மைத்திரிபால சிறிசேன
செயலாளர்-பசில் ராஜபக்ஸ
தேசிய அமைப்பாளர்கள்-விமல் வீரவன்ச, தயாசிறி ஜயசேகர

பிரதித் தவிசாளர்-தினேஷ் குணவர்தன
பிரதி செயலாளர்-மஹிந்த அமரவீர

உப செயலாளர்-உதய கம்மன்பில
உப தவிசாளர்கள்-திஸ்ஸ வித்தாரண, வாசுதேவ நாணாயக்கார டியூ குணசேகர 

No comments: