சிறுவர்நேய மாநகரக் கட்டமைப்பினை உருவாக்குவதற்கான ஆலோசனைக் கூட்டமானது இன்று (2020.02.17) மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் மாநகர சபையின் குழு மண்டபத்தில் இடம்பெற்றது.
சிறுவர்களின் பாதுகாப்பு அவர்களின் சுதந்திரமான வாழ்வியல் முறைகள் என்பவற்றினைக் கருத்தில் கொண்டு மட்டக்களப்பு மாநகரமானது சிறுவர்நேய மாநகரமாக மாற்றியமைக்கப்படவுள்ளது இத்திட்டத்தினை அமுல்படுத்துவற்காக மாநகருக்குள் இயங்கும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் கருத்தறியும் நோக்கோடு மேற்படிக் கலந்துரையாடலானது ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டங்கள், சிறுவர் மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து ஒழுங்குகள், பூங்காக்களை உருவாக்குதல், சிறுவர்களுக்கான விளையாட்டு தொகுதிகளை அமைத்தல், சுற்றுச் சூழல் பாதுகாப்புடன் கூடிய அழகிய வண்ணமயமான மாநகரினை உருவாக்குதல் எனும் ஆலோசனைகள் இங்கே முன்வைக்கப்பட்டன.
பல வளர்முக நாடுகளில் மேற்படி சிறுவர்நேய மாநகரங்கள் அமையப்பெற்றிருந்தாலும், இலங்கையில் முதல்முறையாகவும் ஏனைய மாநகர சபைகளுக்கு எடுத்துக்காட்டாக மேற்படி திட்டம் அமையப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படிக் கலந்துரையாடலில் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் நா.மணிவண்ணன், மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகருக்குள் இயங்கும் அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள். யுனிசெப் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் தனியார் துறைகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
2/17/2020 05:04:00 PM
Home
/
உள்ளூர்
/
மட்டக்களப்பு
/
மாநகர முதல்வர்
/
மாநகரசபை
/
மட்டக்களப்பினை சிறுவர்நேய மாநகரமாக மாற்றும் ஆலோசனைக் கூட்டம்
மட்டக்களப்பினை சிறுவர்நேய மாநகரமாக மாற்றும் ஆலோசனைக் கூட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: