News Just In

2/23/2020 10:40:00 AM

பொலிஸ் கான்ஸ்டபிளின் படுகொலைக் காட்சிகள் வைபரில் நேரலையாக ஒளிபரப்பு!-மூவர் கைது!!

அண்மையில் காணாமல் போயிருந்த கடவத்தை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய வீரகெட்டிய பகுதியைச் சேர்ந்த ஜயந்த ராஜபக்ஷ எனும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் 100 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோப்ப நாய்களின் உதவியுடன் 72 மணி நேரம் மேற்கொண்ட தேடுதலில் குளியாபிட்டிய - பன்னை, யக்வில காட்டுப் பகுதியின் வேரஹெர- புளுகஹவத்த பகுதியில் வைத்து மீட்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் பொலிஸ் கான்ஸ்டபிளின் படுகொலை தொடர்பில் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட கான்ஸ்டபளுடன் தகாத உறவினை பேணிய பெண்ணின் மகனான பண்டி, குறித்த பெண்ணுடைய சகோதரி மகன் சுத்தா மற்றும் உறவுக்காரரான மஞ்சு ஆகிய மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த கான்ஸ்டபிள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு ஆணுறுப்பு வெட்டி வேறாகப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய விசாரணை அதிகாரி, குறித்த கொலை மற்றும் சித்திரவதை காட்சிகள் சிறையில் உள்ள தகாத உறவினை பேணிய பெண்ணின் கணவனுக்கு வைபர் தொழில் நுட்பம் ஊடாக நேரலையாக காண்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments: