மட்டக்களப்பு, கல்லடி இசை நடனக் கல்லூரிக்கு முன்னால் பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் காயமடைந்து மட்டக்களப்பு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று(10) மாலை இசை நடனக் கல்லூரியின் முன்னால் உள்ள பாதசாரி கடவையில் இருவர் வீதியை கடக்க முற்பட்ட போது விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்கும் வாகனம் (recovery vehicle) வீதியில் நிறுத்தப்பட்டது. இச் சந்தர்ப்பத்தில் அதன் பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் நிறுத்தி வைக்கப்பட்ட குறித்த வாகனத்தின் பின்னால் மோதுண்டத்தில் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவரை மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக விபத்தின் போது அவதானித்தவர்கள் தெரிவித்தனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்துள்ளதுடன், மேலதிக விசாரணையினை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.




No comments: