News Just In

2/10/2020 08:04:00 PM

40 ஆயிரம் பேரை கடந்து செல்கிறது கொரோனா வைரஸ்


பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுபடுத்த அந்நாட்டு அரசாங்கம் அதிக அவதானத்தை செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் சுகாதார திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியாவிலிருந்து சீனாவிற்கு சென்று வரும் அனைவரையும் முழுமையான வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உலகலாவிய ரீதியில் 40 ஆயிரத்து 600 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு 910 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றானது இதேவேகத்தில் தொடர்ந்து காணப்படுமாயின் ஒரு மாதத்திறகுள் 5 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுவார்கள் எனவும் சீன நோய் தொற்றுவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: