மன்னார் மாவட்டத்தில் இருந்து அம்பாறை கல்முனை நோக்கி காரில் பயணித்த 3 பேரை மட்டக்களப்பு-வாழைச்சேனை பொலிஸார் மடக்கிப் பிடித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை(10) நடந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரியவருவது 7 கிலோவிற்கு அதிகமான கேரளா கஞ்சாவை காரில் வைத்து கடத்தி சென்றுள்ளனர், மன்னாரில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த குறித்த 3 பேரும் கஞ்சா கடத்திச் சென்ற குற்றத்திற்காக வாழைச்சேனை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட மூவரும் கல்முனை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: