News Just In

2/10/2020 09:44:00 PM

தாழங்குடா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள்


மட்டக்களப்பு-தாழங்குடா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இன்று(10) அதிபர் அ.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களும் ஆன்மீக அதிதி வண.பிதா ம.ஸ்ரனிஸ்லாஸ், சிறப்பு அதிதிகள் பாடசாலை வேலைகள் மாவட்ட பொறியியலாளர் எ.எம்.எம் ஹக்கீம், மண்முனைப்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் ஆர்.ஜெ.பிரபாகரன், கௌரவ அதிதி கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் ஆர்.வேல்சிவம்,

விசேட அதிதிகள் பாடசாலை அதிபர்கள், மண்முனைப் பிரதேச சபை உறுப்பினர் ஆ.சிவலிங்கம், கிராம சேவை உத்தியோகத்தர் எஸ்.டிலக்சன், சுப்பர் ஸ்ரார் விளையாட்டுக் கழக தலைவர் T.டிறாஸ் மொஹான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டுப் போட்டி நிகழ்வின் ஆரம்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அவர்களின் நிதி அனுசரணையின் வாயிலாக கட்டப்பட்ட பாடசாலை சுற்றுமதில் திரை நீக்கம் செய்யப்பட்டது.

தொடர்ச்சியாக மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகள், அணிநடை, உடற்பயிற்சி கண்காட்சி, அதிதிகள் உரை, பரிசில்கள் வழங்குதல் போன்றவற்றுடன் முக்கியமாக மாணவர்களின் யோகாசன நிகழ்வு பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.





























No comments: