ஹபரன – பொலன்னறுவை பிரதான வீதியின் 31 வது மைல்கல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 1 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த விபத்தில், காந்தி திஸாநாயக்க (வயது-56) மற்றும் அவரது 25 வயதுடைய மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments: