News Just In

2/01/2020 05:46:00 PM

கல்லடியில் இடம்பெற்ற ராமகிருஷ்ண மிஷன் சுவாமிகளை வரவேற்கும் நிகழ்வு


இந்தியா தமிழ் நாடு, விழுப்புரம், ராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி பரமசுகானந்தஜீ மஹராஜ் அவர்களையும், மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் உதவிப் பொது முகாமையாளராக பொறுப்பேற்றிருக்கும், ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜீ மஹராஜ் அவர்களையும் வரவேற்கும் நிகழ்வு இன்று(01.02.2020) கல்லடி மணிக்கூட்டுக் கோபுர சந்தியில் வைத்து ஆரம்பமானது.

சுவாமிகளுக்கு மாலைகள் அணிவித்து, வாத்தியங்கள் முழங்க பக்தி பூர்வமாக அழைத்துவரப்பட்டனர்.

மட்டக்களப்பு-கல்லடி ராமகிருஷ்ண மிஷன் முகாமையாளர் சுவாமி தக்ஷஜானந்தர் ஜீ அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன், கல்லடி பிரதேச சமூக அமைப்புக்களின்  அங்கத்தவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலர்  கலந்துகொண்டனர்.















No comments: