
மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரி வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள் இன்று(01) வெபர் விளையாட்டு மைதானத்தில் அதிபர் திருமதி ரி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களும் விசேட அதிதிகளாக கல்வி அபிவிருத்திக்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி ரி.உதயாகரன், தமிழ் மொழிக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆர்.ஜே.பிரபாகரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றார்கள் கலந்துகொண்டனர்.
சிறப்பாக இடம்பெற்ற பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வில் அதிதிகள் வரவேற்பு, விளையாட்டு சுடர் ஏற்றுதல், அணிநடை, உடற்பயிற்சி,, மைதான விளையாட்டுகள், அதிதிகள் உரை, பரிசு வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது.









































No comments: