
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைத்தீவு சக்தி மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாடசாலை அதிபர் சு.உதயகுமாரின் தலைமையில் பாடசாலை பழைய மாணவ சங்கத்தின் நூற்றாண்டு விழாக்குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.
மட்டகளப்பு வைத்தியசாலை இரத்த வங்கி வைத்தியர் ஞா.மனோ துஷாந்தன் தலைமையிலான வைத்திய குழாமினரினால் இரத்த தான முகாம் நடாத்தப்பட்டது. இவ் முகாமில் பல குருதி வழங்குனர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின் போது குருதிக்கொடையாளர்களுக்கு நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
முனைத்தீவு சக்தி மகா வித்தியாலயமானது 1920.01.19ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவ் வருடம் 100வது நிறைவினை கொண்டாடுகின்றது. இதனுடைய தொடர் நிகழ்வுகளாக மருத்துவ முகாம், ஊர்வல நிகழ்வு, நினைவுப்படிகம் அமைத்தல் மற்றும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி என்பன நடாத்தப்பட உள்ளதாக பழைய மாணவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.







No comments: