News Just In

2/01/2020 05:22:00 PM

வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் நடைபெற்ற ஔவை விழாவுக்கான விவாதப் போட்டி


மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்றப் பேரவை, மட்டக்களப்பு வேல்முருகன் சகோதரர்களின் அனுசரணையில் நடாத்தும் ஔவை விழா 2020 எதிர்வரும் 29.02.2020 மாலை 4.00 மணிக்கு மட்டக்களப்பு கல்லடிப் பாலங்களின் மத்தியில் ஔவை சிலைக்கு அருகாமையில் மிகுந்த கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இவ்விழாவின் ஓரங்கமாக மட்டக்களப்பு மாவட்ட மட்டத்திலான விவாதப் போட்டி இன்று (01.02.2020) மட்டக்களப்பு வின்சன்ட் மகளீர் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு அதிதியாக சைவப் புரவலர் ரஞ்சிதமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

15 பாடசாலைகள் பங்குபற்றிய இப்போட்டி முதற் சுற்று லீக் முறையிலும், இரண்டாம் சுற்று மோதி வெளியேறும் வகையிலும் நடைபெற்றது.

இவ் விவாதப் போட்டியின் இறுதிப் போட்டி எதிர்வரும் 29ம் திகதி நடைபெறவுள்ளது.

மாணவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு ஔவை இலக்கியங்களை தேடி வாதிட்டமை குறிப்பிடத்தக்கது.






















No comments: