News Just In

2/06/2020 02:25:00 PM

வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்கவுள்ள இடங்களின் விபரம் வெளியீடு!

வேலையற்ற பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  இதன் மூலம் 2012 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையில் வேலையற்றிருக்கும் சுமார் 50,000 இளைஞர் யுவதிகளுக்கு இதன் மூலம் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன.

இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் பட்டதாரிகளை தொழிலில் ஈடுபடுத்தும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் மேலும் நாடு முழுவதிலும் சில அரச நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வெற்றிடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

விஷேடமாக கிராமத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் அரச ஊழியர்களின் பற்றாக்குறையினால் கிராம மக்கள் அரச சேவையை பெற்றுக் கொளவதில்; பெரும் சிரமங்களை எதிர்கொள்வது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக 2019.12.31 திகதி அன்று பட்டத்தை பெற்ற மற்றும் பட்டதாரிக்கு சமமான கல்வி தகைமையாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தகுதிகளை பூர்த்தி செய்துள்ள இளைஞர் யுவதிகளை பட்டதாரி பயிற்றுவிப்பாளர்களாக ஒரு வருட பயிற்சி காலத்திற்கு உட்பட்டதாக இணைத்துக்கொள்வதற்கும் 

பயிற்சி காலத்திற்கு பின்னர் ஐந்து வருடகாலம் ஆரம்ப நியமன தொழில் ஸ்தானத்தில் பணியாற்றிய பின்னர் மாவட்ட / மாகாண மட்டத்தில் இடமாற்றத்தை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு கூடிய வகையில் தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகள் கீழ் கண்ட நிறுவனத்தின் கீழ் இணைத்துக் கொள்வதற்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

• கல்வி அமைச்சு
(அனைத்து பாடசாலைகளிலும் தரம் மூன்று தொடக்கம் தரம் பதினொன்று வரையில் பாடசாலை கற்கை சிபாரிசுகளுக்கு ' நாயகத்வய' என்ற கற்கைநெறியை உள்ளடக்கி அந்த கற்கை நெறியை கற்பிப்பதற்காகவும், கிராமிய மற்றும் தோட்ட பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை பூரணப்படுத்துவதற்காகவும்)
• நீர்ப்பாசன திணைக்களம் (கிராமிய நீர்ப்பாசன பராமரிப்பு)
• விவசாய அபிவிருத்தி திணைக்களம் (கிராம விவசாய அபிவிருத்தி)
• வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் (வன ஜீவராசிகள் மற்றும் அணுகுமுறை திட்டம்)
• ஆயுர்வேத திணைக்களம் (பிரதேச ஆயுர்வேத வைத்தியசாலைகள்)
• சுகாதார மற்றும் சுதேசிய வைத்திய சேவை அமைச்சு (கிராமிய வைத்தியசாலைகள் ஃ டிஸ்பென்சரி)
• நில அளவை திணைக்களம்
• விவசாய திணைக்களம் (விவசாய சேவை மற்றும் தொழில் நுட்ப சேவை)
• ஏற்றுமதி விவசாய திணைக்களம் (சிறு ஏற்றுமதி பயிர் திட்டம்)
• கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் ( கால்நடை பண்ணை அபிவிருத்தி)
• மதிப்பீட்டு திணைக்களம்
• குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்.

No comments: