அம்பாரை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் திணைக்களத்தின் ஊடாக அம்பாரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அதே நேரத்தில் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள், இவ்வருடம் அம்பாரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள கலாசார விழா மற்றும் இலக்கிய விழாக்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர் எஸ்.நவநீதன் புதிதாகப் பதவியேற்றது முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மாகாணத்திலுள்ள கலைஞர்கள், படைப்பாளிகள், கல்வி மான்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து முக்கியடாகக் கலந்துரையாடப்பட்டதுடன், திணைக்களத்தின் வெளியீடுகள் குறித்தும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.




No comments: