News Just In

2/06/2020 02:59:00 PM

காத்தான்குடியில் நடந்த திடீர் சுற்றிவளைப்பில் போதைப் பொருள் வர்த்தகர் கைது!

காத்தான்குடியில் இடம்பெற்ற திடீர் சுற்றிவளைப்பில் பிரபல ஐஸ் போதைப் பொருள் வர்த்தகர் இன்று (06) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் பெருங்குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய இந்த சுற்றிவளைப்பில் குறித்த வர்த்தகர் அடங்கலாக கஞ்சாவை வைத்திருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி தெரிவித்தார்.

இந்த திடீர் சுற்றிவளைப்பானது மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் மெண்டிஸின் பணிப்புரையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஜெயரட்ணவின் வழிகாட்டலில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் நிலையில் பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி தலைமையிலான பொலிஸ் குழுவினர் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 410 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 1440 கிராம் கஞ்சா என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் காத்தான்குடி பொலிஸார் சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

No comments: