News Just In

2/05/2020 02:51:00 PM

மட்டு-திராய்மடு புதிய மாவட்ட செயலகத்தில் மரம் நடும் நிகழ்வு

இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசின் எழுபத்திரண்டாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய மாவட்ட செயலக வளாகத்தினுள் பயன் தரும் மரங்களை நடும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் நடை பெற்றது.

மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்திலே புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற மாவட்ட செயலக கட்டடத் தொகுதியை செழிப்படையச் செய்யும் நோக்கில் முகிலிகை மரக்கன்று ஒரு தொகுதி மரங்கள் செயலக வளாகத்தில் நடுகை செய்யப்பட்டது. அத்தோடு பழ மரக்கன்றுகளும், பலன் தரும் மரக்கன்று தொகுதி ஒன்றும் நடுகை செய்யப்பட்டது.

தற்போது புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற மாவட்ட செயலக கட்டடத் தொகுதி வளாகத்தினை வனப்புள்ள பிரதேசமாக மாற்றியமைக்கின்ற நோக்கத்துடன் இவ்வாறான செயல் திட்டங்களை அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா ஏற்படுத்தி வருவது குறிப்பிடத் தக்கது.











No comments: