News Just In

2/05/2020 03:27:00 PM

வாகனத்தின் கீழ் சிக்கிய மாணவன் பயணித்த துவிச்சக்கர வண்டி- விபத்தில் 3 பேர் வைத்தியசாலையில்


வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற விபத்தில் மாணவன் உட்பட மூவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,

குறித்த பகுதியில் அமைந்துள்ள வாகனம் பழுது பார்க்கும் நிலையத்தில் நின்ற வாகனம் ஒன்றினை அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் பின்புறமாக நோக்கி செலுத்தியுள்ளார்.

இதன் போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வேகமாக பின்புறமாக நோக்கிசென்று வீதியால் பயணித்துக்கொண்டிருந்த இரு துவிச்சக்கர வண்டிகளுடன் மோதி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்தின் வேலியையும் சோதமாக்கியது.

விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 7 வயது பாடசாலை மாணவன் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: