News Just In

2/21/2020 02:05:00 PM

மட்டு பஸ்தரிப்பு நிலைய மலசலகூட திருத்த வேலைகள் துரிதகதியில்!


மட்டக்களப்பு பஸ்தரிப்பு நிலையத்தில் உள்ள பிரயாணிகள் பாவனைக்கான  மலசல கூடம் திருத்த வேலைக்காக பூட்டப்பட்டு இருந்ததுடன், அதற்கு மாற்றீடாக பஸ்தரிப்பு நிலைய கட்டிடத்தின் மேல் மாடியில் உள்ள மலசல கூடம் தற்காலிக பாவனைக்காக விடப்பட்டு இருந்தது.

கழிவறை திருத்த வேலைகள் கடந்த செவ்வாய்க்கிழமையே  (11.02.2010) பொறியியலாளரால் ஆரம்பிக்கப்பட்டு இருந்ததுடன்,  குறித்த கழிவறையில் இருந்த கழிவு நீர் முழுமையாக வற்றுவதற்கு சில நாட்கள் மலசல கூடம் பூட்டப்பட்டு இருந்தது. இந் நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை (19.02.2020) கழிவு நீர் வற்றியதைத் தொடர்ந்து மீண்டும் திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்போது குறித்த கழிப்பிடத்தின் புனரமைப்பு வேலைகள் துரித கதியில் இடம்பெறுவதுடன், சில நாட்களில் மக்களது பாவனைக்காக விடப்படும் என்று மாநகர சபையினர் தெரிவித்துள்ளனர்.

கழிப்பிடத்தினை உபயோகிக்கும் பொதுமக்கள் அதனை சுத்தமான விதத்தில் பேணாமை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, மது போத்தல்களை குடித்துவிட்டு கழிப்பிடத்தினுள் உடைத்து போடுதல், கழிவுகளை வீசுதல் போன்ற பல முறையற்ற செயற்பாட்டால் கழிவகற்றும் குழாய்கள் துண்டிக்கப்படுவதுடன் துர்நாற்றம் வீசி பாவனைக்கு உகந்ததாக இல்லாமல் இருக்கின்றது.

நேற்று திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட கழிப்பிடத்தினுள் இன்று மது போத்தல்கள் உடைக்கப்பட்டு கிடக்கின்றமை மக்களது பொறுப்புக்கூறும் தன்மையை எடுத்துக்காட்டுகின்றது.

போத்தல்கள் உட்பட கழிவுகளை போடுவதற்காக கூடைகள் வைக்கப்பட்டும் அதனுள் கழிவுகளை போடாத மக்களது அசண்டாதீன செயற்பாட்டால் பெரும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது. இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளை விடுத்து பொது இடங்களை சுத்தமாக பேணுதல் அனைத்து மக்களதும் பொறுப்பாகும்.

துரித கதியில் நடைபெறும் திருத்த வேலைகளை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் நேரில் சென்று பார்வையிட்டதுடன், குறித்த மலசல கூடத்தின் சுத்தத்தினை தொடர்ந்து பேணும் பொருட்டு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பாக ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.
















No comments: