யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கொங்கிறீட் பனல் (Concrete Panel) தொழில்நுட்பத்தில் புதிய வீடுகள் அமைக்கும் பணிகள் வடக்கு மாகாணத்தில் முன்னெடுககப்பட்டுள்ளன.
அதன்படி, சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இன்று தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் மைலடி வடக்கு பிரதேசத்தில் அதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் , பிரதேச செயலாளர் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துக்கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: