News Just In

2/21/2020 01:05:00 PM

4 மணி நேரத்தினுள் அடையாள அட்டை! விண்ணப்பதாரிகளுக்கு SMS மூலம் தகவல்!!

தேசிய அடையாள அட்டைகளை ஒருநாள் சேவையின் கீழ் பெறுவதற்காக விண்ணப்பித்து 04 மணித்தியாலத்திற்குள்அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பப்படிவங்களை ஒப்படைத்த பின்னர் திணைக்கள வளாகத்தில் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்த ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக

விண்ணப்பதாரிகளின் தேசிய அடையாள அட்டைகள் தயாரானதும் குறித்த விண்ணப்பதாரி வழங்கும் கையடக்கத் தொலைபேசி இலக்கத்துக்கு குறுந்தகவல் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆட்பதிவுத் திணைக்கள தகவலின்படி ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டைகளை பெற தினமும் 1500இற்கும் அதிகமானோர் கொழும்பு அலுவலகத்திற்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: