News Just In

2/24/2020 05:37:00 PM

மட்டக்களப்பில் துப்பாக்கி மீட்பு


மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி காட்டுப் பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி ஒன்றை பிரதேச இராணுவ புலனாய்வு பிரிவினர் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த துப்பாக்கி மீட்க்கப்பட்டுள்ளாக தெரிவித்தனர். .

இதன்போது ரி-56 துப்பாக்கியும் அதற்கு பயன்படுத்தப்படும் 23 ரவைகளும் மீட்க்கப்பட்டுள்ளதாகவும் அது சேதமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் வாழைச்சேனை பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

No comments: