மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக முறையில் அனுமதிப் பத்திரம் இல்லாது மண் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்களுடன் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுணதீவு பொலிஸ் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை மாலை சட்டதிட்டங்களை மீறி மண்அகழ்வில் ஈடுபட்ட பெக்கோ இயந்திரம் உள்ளிட்ட இரண்டு கென்டர் ரக வாகனங்களையும் அதில் இருந்த மூவரையும் தாண்டியடி விஷேட அதிரடிப்படையினர் கைதுசெய்து வவுணதீவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மற்றுமொரு சம்பவத்தில் வவுணதீவு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் அனுமதிப் பத்திரம் இல்லாது மண் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரத்தையும் அதிலிருந்த ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களையும் குறித்த நான்கு வாகனங்களையும் திங்கட்கிழமை (24.02.2020) மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த ஹெப்புகாமி தெரிவித்தார்.
No comments: