News Just In

2/06/2020 08:00:00 PM

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்கள் மீண்டும் சேவையில் இணைக்கப்படவுள்ளார்கள்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் நாளாந்த சம்பள அடிப்படையில் பணியாற்றிக்கொண்டிருந்த போது நீக்கப்பட்ட 167 பேரும் நிதி அமைச்சு மற்றும் அமைச்சர்வையின் அனுமதியுடன் உடனடியாக சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த இளைஞர் யுவதிகளுடன் அமைச்சர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தேவையான கல்வித் தகைமைப் பூர்த்தி செய்துள்ள இவர்கள் தொழிலாளர் தரத்தில் முன்னர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள இவர்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில் சேவையாற்றுவதற்கு ஆற்றல் இருக்கின்றதா என்று அமைச்சர் இதன் போது தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தில் தொழிலாளர் தரத்திலும் பாரக்க உயர் பதவிக்கு தகுதி பெற்றவர்கள் இவர்களென இதன் போது குறிப்பிட்டார்.

No comments: