News Just In

2/06/2020 07:14:00 PM

ஸஹ்ரான் ஹாஷிமின் வெடிபொருள் வாகனம் மாவனெல்லையில் மீட்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி ஸஹ்ரான் ஹாஷிம் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் பொலேரோ ரக கெப் வாகனத்தை சி.ஐ.டி.யினர் மாவனெல்லையில் கைப்பற்றியுள்ளனர்.

சி.ஐ.டி.யினர் மேற்கொண்ட விசேட விசாரணைகளில் கிடைத்த தகவல்களுக்கமைய புத்தளம், வண்ணாத்துவில்லு பகுதியில் செயற்பட்ட பயங்கரவாதி ஸஹ்ரானின் பயிற்சி முகாமில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கெப் வண்டி நேற்று கைப்பற்றப்பட்டது.

இந்தவண்டியானது வண்ணாத்துவில்லு பயங்கரவாத முகாமிலிருந்து வெடிபொருட்களை கொண்டு செல்லவும், முகாமுக்கு தேவையான மூலப் பொருட்களை கொண்டுவரவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் ஆரம்பித்துள்ளனர்.

No comments: