பாலமுனை அல் அறபா விளையாட்டுக் கழகத்தின் 25வது ஆண்டு நிறைவையொட்டி 54 அணிகளை கொண்டு 9 நாட்களாக நடாத்தப்பட்ட அரபா பிரிமியர் லீக் - 2020 - சீசன் lV மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரின் இறுதி நிகழ்வுகள் (22) இரவு பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் மிக கோலாகலமாக இடம்பெற்றது.
இந்த சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில் நிந்தவூர் என்.சி.சி அணியும் அக்கரைப்பற்று BBB அணியும் மோதியது. இறுதி போட்டியில் அக்கரைப்பற்று BBB அணியினால் விடுக்கப்பட்ட 59 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்படுத்தாடிய நிந்தவூர் என்.சி.சி அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான நிக்ஸி மற்றும் நஜாத் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தினால் ஒரு விக்கெட்டும் இழக்காமல் வெற்றி இலக்கை அடைந்து 2020 ஆண்டுக்கானஅரபா பிரிமியர் லீக் - 2020 - சீசன் lV கான சம்பியனாக மகுடம் சூடியது.
இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக நிந்தவூர் என்.சி.சி அணியின் நஜாத் அவர்களும் இச்சுற்றுதொடரின் ஆட்டநாயகனாக ஒலுவில் இலவன் ஸ்டார் அணியின் முஹம்மட் ஆதில் அவர்களும் தெரிவாகினர்.
No comments: