கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்னவின் வெள்ளை வான் ஊடக சந்திப்பில் பங்குபற்றிய இருவர் உட்பட 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது குறித்த நபர்களிடமிருந்து டி56 ரக துப்பாக்கிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கம்பஹா கெஹெல்பத்தர பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி இடம்பெற்ற 44 இலட்ச கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments: