News Just In

2/18/2020 02:27:00 PM

திருமலையில் 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு!!


திருகோணமலை மூதூர் பாரதிபுரம் பகுதியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ உறுப்பினர் ஒருவருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி மூதூர் பாரதிபுரத்தை சேர்ந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தமை தொடர்பில் குறித்த முன்னாள் இராணுவ உறுப்பினர்; மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதற்கமைய வழக்கு விசாரணையில் அவருக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 10 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொலை செய்யப்பட்ட நபரின் உறவினர்களுக்கு 1 லட்சம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறும் அதனை செலுத்த தவறினால் மேலும் ஒருவருடம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளசெழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments: