இந்தியாவின் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சாபாரா விளையாட்டு மைதானத்தில் இன்று (5) பகல் இரவு போட்டியாக T 20 கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. போட்டி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த ஆண்டில் இலங்கை - இந்திய கிரிக்கெட் அணிகள் எதிர்கொள்ளும்; முதல் போட்டி இது என்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி இந்த ஆண்டிலும் சாதனைகளை நிலை நாட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று இலங்கை அணியும் தனது நிலையை மீண்டும் சிறப்பான நிலைக்கு முன்னெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உண்டு. அவுஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள T 20 உலக கிண்ண போட்டிக்கு இந்த போட்டி தொடர் இரு அணிகளுக்கும் ஒரு அடிப்படையாக அமையும்.
இந்தியா-இலங்கை அணிகள் இதுவரை 16 T20 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்திய அணி 11 போடடிகளிலும், இலங்கை அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. இரு அணிகளும் இன்று சந்திப்பது 17-வது போட்டியாகும்.
கவுகாத்தி பார்சாபாரா மைதானாத்தில் இதற்கு முன்பு ஒரே ஒரு T 20 ஓவர் போட்டியே இடம்பெற்றுள்ளது . 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடந்த அந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது. அந்த போட்டி முடிந்து ஹோட்டல் அறைக்கு திரும்புகையில் அவுஸ்திரேலிய அணியினர் சென்ற பஸ் மீது ரசிகர்கள் கல்வீசி தாக்கினர்.
தற்போது இந்தியாவில் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் போட்டி நடைபெறும் மைதானம் மற்றும் வீரர்கள் தங்கும் ஓட்டலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போட்டியை காண செல்லும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பதாதைகள், அட்டை, மார்க்கர் உள்ளிட்ட பொருட்களை மைதானத்துக்குள் ரசிகர்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments: