நுவரெலியா சததென்ன பூங்கா பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படவுள்ளது.
தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன, இன்று நுவரெலியா சததென்ன வனவியல் பூங்காவிற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.
நுவரெலியா சததென்ன பூங்காவை பல்கலைக்கழகமாக மாற்றவுள்ளதாக தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிள்ளைகளில் கல்வித் தரத்தை உயர்த்துவதாகவும், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு பெற்றுத் தருவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் காலத்தில் வாக்களித்தார்.
அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இங்கு பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார். பூங்காவை பல்கலைக்கழகமாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் அமைச்சர் அதிகாரிகளுடன் இந்த விஜயத்தின் போது பேச்சுவார்த்தை நடத்தினார்.
1/05/2020 08:50:00 AM
Home
/
உள்ளூர்
/
நுவரெலியா
/
பல்கலைக்கழகம்
/
நுவரெலியா பூங்கா பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படவுள்ளது!
நுவரெலியா பூங்கா பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படவுள்ளது!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: