மட்டக்களப்பு கல்லடி விவேகானந்த மகளிர் கல்லூரி வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள் இன்று(24) சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் அதிபர் திருமதி தர்மசீலன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி ந.முகுந்தன், கௌரவ அதிதியாக மட்டக்களப்பு பிரதிக்கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்) கே.ஹரிஹரராஜ், சிறப்பு அதிதிகளாக பிரதிக்கல்விப் பணிப்பாளர் வி.லவக்குமார், மட்டக்களப்பு கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் எஸ்.ஜெயராஜ் ஆகியோரும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றார்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
அதிதிகள் வரவேற்பு, விளையாட்டு சுடர் ஏற்றுதல், அணிநடை, உடற்பயிற்சி, மாறுவேடப் போட்டி, மைதான விளையாட்டுகள், அதிதிகள் உரை, பரிசு வழங்குதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
இல்லங்களின் தர வரிசை அடிப்படையில் முதலாவது இடத்தினை நிவேதிதா இல்லமும், இரண்டாவது இடத்தினை சாரதா இல்லமும், மூன்றாவது இடத்தினை அவபாமியா இல்லமும் பெற்றுக்கொண்டன.









































No comments: