News Just In

1/24/2020 07:12:00 PM

மட்டு மாநகரத்தில் வெள்ள அனர்த்தத்தில் சேதமடைந்த வீதிகளை செப்பனிடும் பணிகள்


அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்ததினால் மிக மோசமாக சேதமடைந்த வீதிகளை செப்பனிடும் பணிகளை மாநகர சபையானது மேற்கொண்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்ததினால் பிரதான போக்குவரத்து பாதைகள் மிக மோசமாக சேதமடைந்து காணப்பட்டன.

இவ்வீதியால் தமது அன்றாட போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவகின்றமை தொடர்பில் மாநகர சபையின் உறுப்பினர்கள் ஊடக பொது மக்களும், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் மாநகர முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் குறித்த வீதிகளை புனரமைத்து தருமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந் நிலையில் பொதுமக்களின் அன்றாட போக்குவரத்து ஒழுங்குகளை சீர் செய்யும் நோக்குடன் மாநகர சபையினால் செப்பனிடும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த வீதிகளை செப்பனிடும் பணிகளை இன்று (24.01.2020) மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், பிரதி முதல்வர் க. சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர் த.இராஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.










No comments: