மட்டக்களப்பு- பாலாமடு பகுதியில் காட்டு யானையொன்று தாக்கியதில் வயோதிப விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வந்தாறுமூலை பிரதான வீதியை அண்டி வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சீனித்தம்பி கோவிந்தராசா (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சீனித்தம்பி கோவிந்தராசா, தனது நெல் வயலில் காவலில் ஈடுபட்டிருந்தவேளை, அப்பகுதிக்கு வந்த காட்டு யானை அவரை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: