விளையாட்டுக்களில் வெற்றிபெற்று நாடு வெற்றியடையக்கூடிய ஆற்றலைக்கொண்ட வீரர்களுக்கு அதற்கு தேவையான வசதிகளுக்கு வழிவகை செய்யும் விளையாட்டு பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குவததே இதன் நோக்கமாகும் என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் கல்வி விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும, கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் தஜாசிறி ஜயசேகர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் திறமைகளை வெளிப்படுத்திய வீர வீராங்கனைகளுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
நேபாளத்தின் கத்மண்டு மற்றும் பொக்கராவில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமையை தேடிக் கொடுத்த வீர, வீராங்கனைகளுக்கு பணப்பரிசில் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் (14) மாலை கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் மிக விமர்சையாக இடம்பெற்றது.
இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக 500 இற்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் பங்குபற்றியிருந்ததுடன், இதில் 40 தங்கம், 83 வெள்ளி மற்றும் 128 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 251 பதக்கங்களை இலங்கை அணி சுவீகரித்தது.

இதன்படி, தெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் அதிகளவு பதக்கங்களை இம்முறை எமது வீரர்கள் பெற்றுக் கொண்டதுடன், இதற்காக 414 இலட்சம் ரூபா பணப்பரிசுத் தொகையை வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்தது.
எனவே, விளையாட்டுத்துறை நிதியத்தில் இருந்து தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாவும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா 3 இலட்சம் ரூபாவும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாவும் பணப்பரிசாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, 'இலங்கையில் அதிகளவு சர்வதேசப் போட்டிகளை நடாத்துவதற்கு திட்டங்களை வகுத்து விளையாட்டுத்துறைக்கான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும' என தெரிவித்தார்.
மேலும், சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு பெருமையைத் தேடிக் கொடுக்கின்ற வீரர்களுக்காக விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பது அவசியமாகும்.

எதிர்காலத்தில் இந்த நாட்டின் விளையாட்டுத்துறை செழிப்பாக இருக்க வேண்டுமாயின் நாங்கள் அந்த வீரர்களை பாதுகாக்க வேண்டும். இந்த விடயத்தில் எமது அரசாங்கம் நிச்சயம் அவதானம் செலுத்தும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

No comments: