News Just In

1/16/2020 07:56:00 PM

வவுணதீவு பிரதான வீதியில் விபத்து -ஒருவர் படுகாயம்!


(வவுணதீவு எஸ்.சதீஸ்)

வவுணதீவு - ஆயித்தியமலை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுணதீவு - ஆயித்தியமலை பிரதான முள்ளாமுனை எனும் இடத்தில் இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளாகி காயமடைந்த  ஒருவர் 1990 சுவசெரிய இலவச அம்புலன்ஸ் வண்டி மூலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டதுடன் மற்றயவர் சிறு காயங்களுக்குள்ளானார்..

இவ் விபத்து தொடர்பில் வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: