
மட்டக்களப்பு, கல்லடி ராமகிருஷ்ண மிஷனில் சுவாமி விவேகானந்தரின் 158ஆவது ஜனன தின விழா நாளை(2020.01.17) வெள்ளிக்கிழமை சுவாமி தக்ஷஜானந்தர் தலைமையில் கொண்டாடப்படவுள்ளது.
அதிகாலை 5:15 மணியளவில் ஆரம்பிக்கும் நிகழ்வுகள் மதியம் 12:30 மணி வரை இடம்பெறவுள்ளன. பூஜை, பஜனை, தீபாராதனை, ஹோமம் வளர்த்தல், சொற்பொழிவு, பிரசாதம் வழங்குதல் போன்ற பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
சுவாமிகளின் ஜனனதினத்தினை முன்னிட்டு இன்று மாலை கல்லடி பிரதேசத்தில் ஊர்வலம் இடம்பெற்றது. நாளையதினம் இடம்பெறும் ஜனனதின ஆராதனைகளில் அடியவர்கள் அனைவரும் கலந்து கொள்ள முடியும்.





No comments: