மட்டக்களப்பில் வருகின்ற கிழமை 1500 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது, அதில் 700 வேலைவாய்ப்புக்கள் என்னால் வழங்கப்படவுள்ளன என பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பு சுடர் விளையாட்டு கழகத்தின் தைப்பொங்கல் விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவிக்கையில்
நான் விரும்பினாலும், நீங்கள் விரும்பினாலும் அல்லது விரும்பா விட்டாலும் இப்போது உள்ள அரசாங்கம்தான் இன்னும் 10 அல்லது 15 வருடத்திற்கும் போகும். இந்த அரசாங்கம் நிச்சயமாக தமிழ் தேசிய கூட்டமைப்பை அழைத்து பேசாது. கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தைக்கான பல முயற்சிகளை செய்கிறார்கள் ஆனால் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ அதற்கு அனுமதி வழங்கவில்லை.
இதனை இவர்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு செய்திருக்க வேண்டும். இவர்கள் அனைவரும் கோயிலை இடித்த போதோ அல்லது தீவிரவாதியின் தலையினை தாட்ட போதோ எதுவும் செய்யவில்லை, நாங்கள்தான் களத்தில் இறங்கி போராடினோம்.
நான்கு வருடம் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து என்னால் 21 பேருக்கு மாத்திரமே வேலையினை பெற்றுக்கொடுக்க முடிந்தது. ஆனால் இப்போது 45 நாள்தான் ஆகின்றது என்னால் 700 பேருக்கு வருகின்ற கிழமை வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த 700 பேருக்கு வேலைவாய்ப்பினை நான் கூட்டமைப்பில் இருந்து வழங்க விரும்பினால் 250 வருஷம் உயிரோடு இருந்திருக்க வேண்டும். அத்தோடு க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைய தவறியவர்கள் 1500 பேருக்கு மட்டக்களப்பில் வருகின்ற கிழமை வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதனால் 1500 குடும்பங்களில் விளக்கெரியும் என மேலும் தனது உரையில் குறிப்பிட்டார்.

No comments: