News Just In

1/23/2020 07:37:00 PM

கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு

கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் www.visiteastsrilanka.lk என்ற உத்தியோகபூர்வ இணையதள அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு இன்று கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தினால் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் கடந்த காலங்களில் மேற்கொண்ட வேலைத்திட்டங்கள் டிஜிட்டல் சந்தை அறிமுகம் தொடர்பான விடயங்கள் பற்றி இதன் போது கிழக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் பொது முகாமையாளர் ஏ.எஸ்.எம்.பாய்ஸால் தெளிவுபடுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பி வணிகசிங்க, மாகாண அமைச்சின் செயலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments: