வாழைச்சேனை காகித ஆலை மற்றும் அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு அமைச்சர் விமல் வீரவன்ச அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
மட்டக்களப்பு வாழைச்சேனை காகித ஆலையின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார். இதன்போது முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
வாழைச்சேனை காகித ஆலை தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்து இதனை மீண்டும் செயல்பட வைக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு தருவதாக தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச
குறித்த தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பித்தால் நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்பு வழங்க முடியும் என்றும் வெளிநாட்டில் இருந்து காகிதாதிகளை இறக்குமதி செய்ய தேவையில்லையென்றும் இதன்போது தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டுமுதல் காகித ஆலையானது இயங்கமுடியாமல் தமது உற்பத்தியினை நிறுத்தியது. 500- 3000 பேர்கள் இவ் ஆலையின் தொழில் புரிந்து வந்தனர். அவர்கள் தங்களது தொழிலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு காணப்படுகின்றனர். தற்போது காகித ஆலை வளாகம் பற்றைக்காடுகள் வளர்ந்து பாழடைந்து காணப்படுகிறது.இதன் இயந்திரங்கள் 2016 ஆம் ஆண்டு வரை இயங்கியது. தற்போது செயலிழந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அமைச்சர் நேற்று (வெள்ளிக்கிழமை) அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு விஜயம் செய்துள்ளார். அங்கு இடம்பெற்றுவரும் காகித உற்பத்தி, மரக்கறி எண்ணெய் உற்பத்தி ஆகிய உற்பத்தி நிலையங்களை பார்வையிட்டார்.

இதன்போதே இக் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் பணிபுரிவோர் தொழிற்சாலையை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக சிறிய, நடுத்தர தொழில்துறை, தொழில் முயற்சி, கைத்தொழில் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச கலந்துரையாடினார்.
இதேவேளை, யாழ்ப்பாணம், கைதடியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிலையத்துக்கும் அமைச்சர் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள பிரச்சினைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

No comments: