News Just In

1/21/2020 07:35:00 PM

மட்டக்களப்பு இந்து கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள்


மட்டக்களப்பு இந்து கல்லூரி வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள் இன்று(21) பாடசாலை மைதானத்தில் அதிபர் R. சண்டேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களும் விசேட அதிதியாக மட்டக்களப்பு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் S.குலேந்திரகுமார், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் அதிகாரி மற்றும் கல்வி நிருவாக உத்தியோகத்தர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெறோர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

அணிநடை, மைதான விளையாட்டுக்கள், பரிசில்கள் வழங்குதல், மாறுவேடப்போட்டி, உடற்பயிற்சி, அதிதிகள் உரை போன்ற பல நிகழ்வுகள் அலங்கரித்தன.

விளையாட்டு நிகழ்வின் இறுதியாக போட்டி முடிவுகளின் அடிப்படையில் நான்காம் இடத்தில் நல்லையா இல்லமும், மூன்றாம் இடத்தினை  சோமகாசேகரம் இல்லமும், இரண்டாம் இடத்தினை இராஜகாரியார் இல்லமும், முதலாம் இடத்தினை குணசேகரம் இல்லம் பெற்றுக்கொண்டது.








































No comments: