News Just In

1/22/2020 08:22:00 AM

ஓய்வூதியம் பெறும் நபர்களின் தகவல் மற்றும் வாழ்வாதார செயற்பாடுகள் டிஜிட்டல் மயமாக்கம்!

ஓய்வூதியம் பெறுவோர் தொடர்பான தகவல்களை பதிவு செய்தல் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கான வருடாந்த செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நிகழ்வு அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வு திங்கட்கிழமை (20.01.2020) ஓய்வூதியத் திணைக்களத்தில் நடைபெற்றது. சில பகுதிகளில் உயிரிழந்த ஓய்வூதியக்காரர்களின் பணத்தை மோசடியாக பெற்றுக் கொள்கின்றனர்.

இந்த நிலைமைகளை தவிர்க்கும் பொருட்டு, ஓய்வூதியக்காரர்களை பதிவு செய்தல் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை ஓய்வூதிய திணைக்களம், வருடாந்தம் மேற்கொண்டு வருகிறது.

தற்போது 6 லட்சத்து 41,000 பேர் ஓய்வூதியம் பெறுபவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு ஓய்வூதியக் கொடுப்பனவை வழங்குவதற்காக அரசாங்கம் மாதாந்தம் 25 ஆயிரம் கோடி ரூபாவை ஒதுக்குகின்றது.

No comments: